இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணி மோதல் - முதலாவது டெஸ்ட்

21.03.2021 08:31:32

கடந்த நான்கு போட்டிகளில் இலங்கை அணி தோல்வி.. இறுதி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் தீவுகள் அணி வெற்றி !

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.

அன்டிகுவா மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ள இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கிரெய்க் பிராத்வைட்டும் இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும் தலைமை தாங்கவுள்ளனர்.

புதிய ஸ்டாண்ட்-இன் கப்டனாக பெயரிடப்பட்ட பிராத்வைட், பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற அடிப்படையில் வெற்றிபெற காரணமாக அமைந்தார்.

மேலும் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில் இடம்பெற்ற கடந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மூன்று போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்றுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கையின் சமீபத்திய இரண்டு ஆண்டுகளில் பெரிதளவில் பிரகாசிக்கவில்லை என்றே கூறவேண்டும்.

குறிப்பாக கடந்த நான்கு போட்டிகளில் தோல்வியுற்ற நிலையில் 2020 ஜனவரியில் சிம்பாப்வேக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றியே இறுதியாக இலங்கை அணி பெற்றுக்கொண்ட வெற்றியாகும்.

இதவேளை அன்டிகுவா மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி இறுதியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் வென்றுள்ளன.

மேலும் இந்த மைதானத்தில் சராசரியாக முதல் இன்னிங்ஸில் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணியாக்கி 291 என்பதுடன் பங்களாதேஷ் அணி பெற்றுக்கொண்ட 43 ஓட்டங்களே குறைந்த ஓட்ட எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.