பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் பணப்பரிசு

15.04.2024 14:44:04

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலிருந்து மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு பணப்பரிசு வழங்கப்படும் என வேர்ல்ட் அத்லட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) அறிவித்துள்ளது.

இதன் மூலம் 128 வருட ஒலிம்பிக் வரலாற்றில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு பணப்பரிசு வழங்கும் முதலாவது விளையாட்டுத்துறை சம்மேளனம் என்ற பெருமையை உலக மெய்வல்லுநர் நிறுவனம் பெறவுள்ளது.

 

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் வருவாய் பங்கு ஒதுக்கீட்டிலிருந்து கிடைக்கப்பெறும் 2.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 71 கோடியே 62 இலட்சத்து 32,000 ரூபா) மொத்த பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது.

இந்த மொத்த பணப்பரிசு ஆண், பெண் இருபாலாரிலும் தங்கப் பதக்கத்தை சுவீகரிக்கும் 48 மெய்வல்லுநர்களுக்கு பகிர்ந்தளிகப்படும். இதன் படி ஒருவரக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக வழங்கப்படும் என உலக மெய்வல்லநர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலிருந்து வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றெடுக்கும் மெய்வல்லுநர்களுக்கும் பணப்பரிசு வழங்க உலக மெய்வல்லுநர் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.