விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும்தான் போட்டியே!.
சேலத்திற்கு பின் இன்று வேலூரில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு பேசி வருகிறார். இந்த கூட்டத்தில் 4,900 நிர்வாகிகள் கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாலும், சேலத்தில் சுராஜ் என்பவர் வெயில் கொடுமை தாங்காமல் உயிரிழந்ததாலும் தவெக கூட்டத்திற்கு போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
கியூ ஆர் கோட் மூலம் மட்டுமே அனுமதி, குடிநீர், மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், மக்களும், நிர்வாகிகளும் வெயிலில் நிற்க கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை போலீசார் விதித்திருக்கிறார்கள்.. இந்நிலையில்தான், இன்று வேலூரில் பேசவிருக்கிறார் விஜய். ஒருபபக்கம் விஜயை பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் பல பெண்களும் அங்கே வந்திருந்தார்கள்.
இந்த கூட்டத்தில் பேசிய விஜய் ‘முதல்வர் ஸ்டாலின் செம காமெடி செய்து கொண்டிருக்கிறார். டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் போட்டி என்கிறார்.. திமுகவுக்கும், என்.டி.ஏ-வுக்கும் இடையே போட்டி என்கிறார். இது என்ன பாராளுமன்ற தேர்தலே. என்ன லாஜிக்கில் பேசுகிறார்கள் என்பதே புரியவில்லை.
இந்த தேர்தல் மக்களுக்கும், திமுகவுக்கும் இடையே நடக்கும் போர், ஊழலுக்கும் மக்களுக்கும் இடையேயான போர். லஞ்சத்திற்கும் மக்களுக்கும் இடையே நடக்கும் போர்.. இன்னும் சொல்லப்போனால் இது விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடக்கும் போர். நான்தான் தமிழ்நாடு.. தமிழ்நாடுதான் விஜய். திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி’ என ஆவேசமாக பேசியிருக்கிறார்.