ராணுவ விமானம் வெடித்து சிதறி விபத்து

16.08.2021 15:00:00

உஸ்பெகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ராணுவ விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து உஸ்பெகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்களை திரட்டி வருவதாகவும், உஸ்பெகிஸ்தான் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவிக்கவும் ரஷ்ய பத்திரிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

எல்லையை கடந்த 84 ஆப்கான் வீரர்களை தடுத்து நிறுத்தியதாகவும், அவர்கள் மருத்துவ உதவி கோரியதாகவும் உஸ்பெகிஸ்தான் நேற்று தெரிவித்துள்ளது.