’மஞ்சும்மெல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்களிடம் விசாரணை.

13.06.2024 07:05:00

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மலையாளத் திரைப்படமான ’மஞ்சும்மெல் பாய்ஸ் என்ற படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எதிரான பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளதாகவும் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி உள்பட சிலரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன 

சிதம்பரம் இயக்கத்தில் சான் ஆண்டனி தயாரிப்பில் உருவான ’மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி வசூல் செய்த நிலையில் இந்த படத்தின் குழுவினர் சிலர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர் 

குறிப்பாக சிராஜ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் இந்த படத்திற்காக 7 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் படத்தின் லாபத்திலிருந்து 40% தொகையை பங்காக தருகிறேன் என்று கூறியிருந்ததாகவும் ஆனால் ஒரு ரூபாய் கூட தரவில்லை என்றும் குற்றம் காட்டி இருந்தார்.

தற்போது இந்த வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணை தொடங்கி இருப்பதாகவும் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது 

 

மேலும் மற்ற தயாரிப்பாளர்கள் சவுபின் ஷாயிர், பாபு ஷாயிர் ஆகியோர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது