
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (05) ஆரம்பமாகின.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 - பி.ப. 4.00 பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் அவர்களை 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் – நிறைவேற்றப்படவுள்ளது.
பி.ப. 4.00 தீர்மானம் மீதான வாக்கெடுப்பு.
பி.ப. 4.15 - பி.ப. 5.30 (i) மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது.
(ii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது.
பி.ப. 5.30 - பி.ப. 6.00 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி).