தலிபான் வசமானது தலைநகர் காபூல்

15.08.2021 16:56:24

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தலிபான் வசமானதை அடுத்து அதிபர் அஷ்ரப் கனி காபூல் நகரை விட்டு வெளியேறினார். இடைக்கால அதிபராக அலி அமகது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடும் சண்டை

அதன்பின், ஆப்கனில் ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கனில் இருந்து இம்மாத இறுதியில் வெளியேற உள்ளன. இதையடுத்து ஆப்கனை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் தலிபான் இறங்கியுள்ளது. கடந்த மூன்று வார சண்டையில் 13 மாகாணங்களை தலிபான் கைப்பற்றியுள்ளது. கிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான ஜலாலாபாத்தை தலிபான் தீவிரவாதிகள் இன்று (ஆக., 15) கைப்பற்றினர். அந்த நகரை சண்டையிடாமலே கைப்பற்றியதாக தெரிவித்து உள்ளனர். ஆப்கனில் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.

தொடர்ந்து, கடும் மோதலில் ஈடுபட்ட தலிபான்கள் காபூல் நகருக்குள் அனைத்து பகுதிக்குள் இருந்தும் நுழைந்தனர். அங்குள்ள கனக்கன், குராபாத் பாக்மான் மாவட்டங்களுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக தெரிகிறது. இதனையறிந்த அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் இருந்து வெளியேறினர். இதனால், அங்கு இரு தரப்புக்கு இடையே துப்பாக்கி சண்டை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், தாக்குதல் நடத்த விருப்பமில்லை; வலுக்கட்டாயமாக நகரை கைப்பற்ற விரும்பவில்லை எனவும், அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என தலிபான்கள் கூறிவந்தனர். அதற்காக தலிபான் அமைப்பின் பிரதிநிதிகள், ஆப்கன் அதிபர் மாளிகையில் அரசின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.