"கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கதி அதோ கதிதான்" .
|
தமிழகத்தில் சட்டசபை தேர்த்ல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொங்கு மண்டல கள நிலவரத்தின்படி ஒரு சீட்டு கூட அதிமுக ஜெயிக்காது என்றும், எடப்பாடியார், வேலுமணி கூட ஜெயிக்கமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி இல்லாமல் வேறு யாராவது தலைமை இருந்திருந்தால் டஃப் கொடுத்திருக்கலாம் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். புரட்சி அண்ணா திமுக நிறுவனர் புகழேந்தி ரேஸ்கோர்ஸ் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவையை சுற்றி வந்துள்ளோம்.
|
|
கொங்கு மண்டல கள நிலவரத்தின்படி ஒரு சீட்டு கூட அதிமுக ஜெயிக்காது. எடப்பாடியார், வேலுமணி கூட ஜெயிக்கமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி இல்லாமல் வேறு யாராவது தலைமை இருந்திருந்தால் டஃப் கொடுத்திருக்கலாம். தேர்தல் விதிமுறை இண்டி கூட்டணி பலமாக உள்ளது. கூட்டணியில் உள்ள கட்சி தான் எதிர்கட்சியாக வரும் என்று தேர்தல் விதிமுறையை மீறி பேச கூடாது. ஆனால் அதன் எல்லையை மீறிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியில் வெள்ளம், கொரொனா வந்ததா என எடப்பாடி கேட்கிறார். நல்லவர் ஆட்சியில் அது வராது உங்களுடைய ஆட்சியில் தானே வரும். முதல்வரை பார்த்து கொரொனா வந்தால் போயிருப்பார் என எடப்பாடி கூறுகிறார் நம் குடும்பத்தில் யாராவது இருந்தால் அதுபோல் பேசுவோமா?. அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வரையும் விமர்சிக்கிறார். தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதை வேடிக்கை பார்க்கிறது. கலாம் கனவு காண சொன்னார் என்றால் இங்குள்ள ஒரு குடிகார பையன் நயன்தாரா வேண்டும் என கூறுகிறான். உள்ளாட்சியில் நல்லாட்சி செய்திருந்தால் ஏன் மாநகராட்சி தேர்தலில் அதிமுக தோற்றது?. திண்டுக்கல் சீனிவாசனுக்கு புடவை அளிக்கிறார்கள். ஆனால், பாவாடை தரவில்லை என கேவலமாக பேசுகிறார். நான் வழக்கு பதிவு செய்துள்ளேன் பழனிச்சாமி பரப்புரை நிறுத்தப்படும். அதிமுகவில் கேவலமான அரசியல் நடக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி கலவரத்தை தூண்ட முயல்கிறார். நான் எந்த காலகட்டத்திலும் கலைஞரை தவறாக பேச மாட்டேன், அதே போல் அவர்களும் அம்மாவை பேச மாட்டார்கள். மதசார்பற்ற இண்டி கூட்டணி வர வேண்டும். அண்ணாமலைக்கே ஆப்பு, அல்வா கொடுத்து ஓரமாக அமர வைத்து விட்டார்கள். பாஜக தமிழ்நாட்டில் இருக்கவே கூடாது. பாஜகவிற்கு எதிராக இருப்பதால் நாங்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறோம். அதிமுக தான் முதலமைச்சரை முடிவெடுக்கும் என தைரியம் இருந்தால் எடப்பாடி சொல்லட்டுமே. ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகம் இல்லை. ஜெயலலிதா தைரியம் எல்லாம் எங்கே சென்றது. ஆட்டம் காணும் எடப்பாடி தொகுதி டெல்லி தான் எடப்பாடி பழனிச்சாமி ஜெயிப்பார் என நம்புகிறது. ஆனால் அது நடக்காது. மேலும், அதிமுக கூட்டணி விவகாரத்தில் பாமகவிற்கு ஒரு தீர்ப்பு, பழனிச்சாமிக்கு தீர்ப்பு என தேர்தல் ஆணையம் வழங்குகிறது. பழனிச்சாமி என்ற தலைமை மாறினால் டஃப் இருக்கும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தொகுதியே ஆட்டம் காணப்போகிறது. தவெக கூட்டணிக்கு வருமா வராதா என்பதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும். செங்கோட்டையனால் தவெகவில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. விஜய் மதியத்திற்கு மேல் வெளியே செல்வதில்லையே, மக்கள் அதனை எதிர்பார்ப்பார்கள் அல்லவா. ஜனநாயகன் படம் லீக் ஆனது தொடர்பான கேள்விக்கு மத்திய அரசு கையில் சென்சார் உள்ளது. சினிமாவை தடை செய்து எல்லாம் அரசியல் செய்ய கூடாது (ஜனநாயகன்). நான் இன்னும் ஆன்லைனில் படம் பார்க்கவில்லை, பார்த்து விட்டு கூறுகிறேன் என்றார். |