அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்துவதை நிறுத்துவதாக ஒன்றாரியோ அறிவிப்பு !

12.05.2021 09:54:24

 

கனடாவின் ஒன்றாரியோ மாநில அரசு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட் 19 தடுப்பூசி செலுத்துவதை  இடைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த தடுப்பூசியை பயன்படுத்துவதினால் இரத்தம் உறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்  உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது மதிப்பிட்டதை விட சற்று அதிகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த ஆதாரங்களை மேற்கோள்ளிட்டுள்ள குறித்த மாநிலம் மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளது.

இது  தொடர்பில்  கருத்து தெரிவித்துள்ள ஒன்ராறியோ அதிகாரிகள், இதுவரை தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 60 ஆயிரம் பேரில் ஒருவர் இரத்தம் உறைவதை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  மொத்தமாக  8 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பல ஐரோப்பிய நாடுகளில் 95 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.