10,000 பவுண்டுகள் மன்செஸ்டர் ஆர்ப்பாட்டத்தின் அமைப்பாளருக்கு அபராதம் !
இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்.) ஊழியர்களுக்கான அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய 1 சதவீத ஊதிய உயர்வு திட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் அமைப்பாளருக்கு 10,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மதியம் மன்செஸ்டர் நகர மையத்தில் நடந்த பேரணியில் சுமார் 40 பேர் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் விதிகளால் பொதுக் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அதிகாரிகள் வெளியேறும்படி கேட்ட பின் பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக என்.எச்.எஸ்., 61 வயதுடைய ஒரு பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் வெளியேற மறுத்த பின்னர் விhரங்களை வழங்கத் தவறியதற்காக 65 வயதான மற்றொரு என்.எச்.எஸ் தொழிலாளி கைது செய்யப்பட்டார். இணங்கிய பின்னர் அவர் கைது செய்யப்பட்டு 200 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிச்சயமற்ற நிதி நிலைமையைக் காரணம் காட்டி 2021-22ஆம் ஆண்டிற்கான 1 சதவீத ஊதிய உயர்வு பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.