
தேசிய மக்கள் சக்தி செய்வது ஒரு பச்சை இனவாதம்.
22.08.2025 15:27:51
நாங்கள் இனவாதம் கதைப்பதில்லை என கூறும் தேசிய மக்கள் சக்தி செய்வது ஒரு பச்சை இனவாதம் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று (22) உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
"எங்களுடைய ஶ்ரீதரன் ஐயா, ஒரு வசனம் கூட கதைக்கவில்லை. ஆனால் பிமல் ரத்நாயக்க கூறியிருக்கிறார். ஶ்ரீதரன் ஐயாவின் பிரேரணையில் தமிழ், சிங்களம் என இரு இனங்கள்தான் இருக்கிறது என்று. எப்படி ஒரு அப்பட்டமான கேவலமான கதை. பிமல் ரத்நாயக்க வெட்கித் தலைகுனிய வேண்டும். அவர் அப்படி கதைக்கவில்லை என நான் கூறினேன்."