தென் கொரியா - அமெரிக்கா போர் ஒத்திகை: வட கொரியா எச்சரிக்கை
தென் கொரியா அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டால், அதற்குப் பதிலடி தர தங்களது தாக்குதல் திறனை அதிகரிக்கப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:தென்கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கணினி மூலம் போர்ப் பயிற்சி வரும் 16 முதல் 26ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக, இரண்டு நாட்டுப் படைகளும் இணைந்து நான்கு நாள்களுக்கு போர் ஒத்திகையில் ஈடுபடப் போவதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்மூலம், வட கொரியா மீதான படையெடுப்புக்கு அமெரிக்காவும் தென் கொரியாவும் ஒத்திகை பார்க்கவுள்ளன. அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள முன்கூட்டியே தாக்குதல் நடத்தும் எங்களது திறனை நாங்கள் மேம்படுத்திக்கொள்ள இருக்கிறோம். வட கொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும் அமெரிக்க அரசு, இது போன்ற ராணுவ ஒத்துகையில் ஈடுபடுவதன் மூலம் தனது இரட்டை வேடத்தை வெளிப்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.