புதுடில்லியில் ரணில்

28.02.2025 08:22:04

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (28/02/2025) இந்தியாவின் புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் உலகளாவிய சிக்கல்கள் குறித்துச் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று இந்தியா சென்ற ரணில் விக்கிரமசிங்க குறிப்பாகத் தெற்காசியாவின் புவிசார் அரசியல் நிலை, பொருளாதார சவால்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக் குறித்து உரையாற்றுகிறார்.

இராஜதந்திரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் முன்னாள் அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் உரை நிகழ்த்துவார்கள்.

 

தனது பயணத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடுவார் என்றும், முக்கிய இந்திய வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பயணத்தை முடித்துக்கொண்டு ரணில் மார்ச் மாதம் 02 ஆம் திக‌தி இலங்கை திரும்ப உள்ளார்.