மகாசமுத்திரம் படத்தில் ரம்பா பாடல்

06.08.2021 08:26:00

தெலுங்கில் ஆர்எக்ஸ்-100 என்ற படத்தை இயக்கிய அஜய் பூபதி தற்போது சித்தார்த் - சர்வானந்த் நடிப்பில் இயக்கியுள்ள படம் மகா சமுத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் நாளை இப்படத்தின் முதல் பிரமோசன் பாடல் வெளியிடப்படுகிறது. அந்தவகையில், நடிகை ரம்பாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஹாய் ரம்பா என்ற லிரிக்கல் சாங்கை வெளியிடுகிறார்கள். சைமன் பரத்வாஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.