உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

20.08.2026 14:54:01

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக பொருளாதாரப் போர் தொடுப்பதாக எச்சரித்ததைத் தொடர்ந்தும், ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடனான வர்த்தகத்தை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்தும் இது நிகழ்ந்துள்ளது.

அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 94 டொலராகவும், ஒரு பீப்பாய் WTI எரிபொருளின் விலை 87 டொலராகவும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.