மெக்கின்சியுடன் மீட்பு நிதி தொடர்பாக ஒப்பந்தம் – விமர்சனங்களை எதிர்கொள்ளும் இத்தாலி

07.03.2021 08:00:00

ஐரோப்பிய ஒன்றிய நிதி தொடர்பாக மெக்கின்சியுடன் ஒப்பந்தம் செய்த ஆலோசனை மேற்கொண்டமை தொடர்பாக இத்தாலிய அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை மெக்கின்சியுடன் 25,000 யூரோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் நிறுவனம் வேலை செய்யும் நேரம் குறித்த விவரங்கள் வெளியிடப்பவில்லை என்பதுடன் நிறுவன செலவினங்களை ஈடுசெய்ய குறித்த நிதி போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.

அரசியல் பின்புலம் இல்லாத ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான மரியோ டிராகி, கடந்த அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர் கடந்த மாதம் பிரதமராக பதவியேற்றார்.

இத்தாலியின் மீட்பு திட்டத்தை மறுவடிவமைப்பது, ஏப்ரல் மாதத்திற்குள் ஐரோப்பிய ஆணைக்குழுவில் இருந்து 200 பில்லியன் யூரோக்களை திரட்டவும் தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்பதாகவும் உறுதியளித்தார்.

இந்நிலையில் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே தயாரித்த திட்டங்களை மதிப்பீடு செய்ய மெக்கின்சியிடம் கேட்டுக் கொண்டதாக பொருளாதார அமைச்சு அறிவித்ததை அடுத்து அரசாங்கம் மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

அந்தவகையில் மீட்புத் திட்ட நிர்வாகத்தில் ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டு அவை விளக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதி பொருளாதார அமைச்சர் அன்டோனியோ மிசியானி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நடவடிக்கை அரச ஊழியர்களுக்கு அவமானகரமானது என்றும் அரசியல் பொறுப்பில்லாத நடவடிக்கை என்றும் LEU கட்சியின் துணைத் தலைவரான ஸ்டெபனோ பாசினா விமர்சித்துள்ளார்.