வண்ணமயமாக காத்திருக்கும் பிரித்தானிய வானம்!

13.09.2024 07:52:00

வடக்கு ஒளிகளை இன்று இரவு பிரித்தானிய பகுதிகளில் தெரியக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவின் பல பகுதிகளில் இன்று இரவு வடக்கு ஒளிகள்(Northern Lights) தெரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அற்புதமான ஒளிக்காட்சிக்கு "சிறந்த பார்வை நிலைமைகள்" இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம்(The Met Office) கணித்துள்ளது.

   

வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் இது அதிகமாக தெரிய வாய்ப்புள்ளது.

மேலும், வடக்கு நார்ஃபோக் கடற்கரை வரையிலும் கூட வடக்கு ஒளி தெரியக்கூடிய என்ற சாத்தியம் உள்ளது என்று வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வடக்கு ஒளிகள் (வியாழன்)இன்று இரவு மற்றும் நாளை (வெள்ளி)அதிகாலை தெரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியனிலிருந்து வரும் மின்னூட்டப்பட்ட துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களுடன் மோதும் போது இது நிகழ்கிறது.

இந்த மோதலின் போது பல்வேறு அலைநீளங்களில் ஒளி வெளிப்படுகிறது, இதன் விளைவாக அற்புதமான நிறங்களுடன் கூடிய வடக்குப்புற ஒளி உருவாகிறது.