சீன செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன

07.11.2021 14:56:01

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் ஏவுதளத்தில் இருந்து, 'ரிமோட் சென்சிங்' எனப்படும், மூன்று தொலை உணர்வு செயற்கைக்கோள்கள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டன.

'யாவோகன் - 35' என்ற பிரிவைச் சேர்ந்த இந்த செயற்கைக்கோள்கள், 'மார்ச் - 2டி' ரக ராக்கெட் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்டன. செலுத்தப்பட்ட சில மணி நேரத்தில் அவை, சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்ததாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.