பகல் நேரத்தை இருளாக்கிய மிகப்பெரிய சூரிய கிரகணம்

09.04.2024 07:41:46

இந்த ஆண்டுக்கான (2024) முதலாவது சூரிய கிரகணம் நேற்று திங்கட்கிழமை (08) நிகழ்ந்தது.

இந்த முழு சூரிய கிரகணத்தை, அமெரிக்கா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பல கோடி மக்கள் நேற்று (இலங்கையில் இரவாக இருந்தபோது) கண்டுகளித்தனர்.

இந்தச் சூரிய கிரகணத்தில், நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வந்து, அதன் ஒளியை முழுவதும் மறைத்தது.

இந்தக் கிரகணத்தின் பாதை, வட அமெரிக்கக் கண்டம் முழுதும் அமைந்தது. மேற்கே மெக்சிகோவின் கடற்கரையிலிருந்து, கிழக்கே நயாகரா நீர்வீழ்ச்சி வரை இந்தக் கிரகணம் கடந்து சென்றது.

இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் நீடித்தது. இந்த முழு சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி இரவு 9.12 மணிக்கு ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைந்தது. எனினும், முழு சூரிய கிரகணம், இலங்கை நேரப்படி இரவு சுமார் 10.10 மணிக்கு