
தன் உயிரை மாய்த்த மொடல் அழகி.
கருப்பழகி பிரிவில் பட்டம் வென்ற புதுவை மாடல் அழகி சான்ரேச்சல் காதல் திருமணம் செய்த ஓராண்டில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
26 வயதான அவர் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்ற அழகி போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் மற்றும் விருதுகளை குவித்து தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அதுமட்டுமல்லாது புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு ‘மொடலிங்’ (பேஷன் ஷோ) பயிற்சி வகுப்புக்களையும் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டனர்.
இதேவேளை சான்ரேச்சல் தனது திருமணத்திற்காகவும், பேஷன் ஷோ நடத்துவதற்காகவும் பலரிடம் லட்ச்சக்கணக்கில் கடன் பெற்றிருந்ததாகவும் இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன் வீட்டில் இருந்த சான்ரேச்சல் தனது தந்தைக்கு அழைப்பினை ஏற்படுத்தி தான் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை மற்றும் ரத்த அழுத்த (பி.பி.) மாத்திரைகளை தின்று விட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை மகளது வீட்டுக்கு விரைந்து சென்று அங்கு மயங்கிக் கிடந்த மகள் சான்ரேச்சலை மீட்டு புதுச்சேரி அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சான்ரேச்சல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேவேளை சான்ரேச்சல் இறப்பதற்கு முன்னர் தனது கணவர், தந்தை மற்றும் மாமியார் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியிருந்தார்.
அக் கடிதங்களில் ‘தான் தனது குடும்பத்திற்கு தெரியாமல் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளதாகவும், அக் கடனை தன்னால் திரும்ப செலுத்த முடியவில்லை எனவும், தனது உறவினர்கள் உதவுவார்கள் என்று எண்ணியதாகவும், ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை எனவும், தற்கொலைக்கு தன்னை அனைவரும் மன்னித்து விடவேண்டும் எனவும் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சான்ரேச்சல் கடன் தொல்லையால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் எனவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.