தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்
19.08.2021 05:00:00
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
தலிபான்கள் அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தலிபான் தளபதியும், மற்றுமொரு சிரேஷ்ட தலைவரும், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமிட் கர்ஸாயை சந்தித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும், இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் இதுவரையில் தெளிவாக வெளியிடப்படவில்லை என வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.