இலங்கை வர தயாராகிறது ஒட்சிசன் கப்பல்
20.08.2021 05:00:00
இலங்கைக்கு பிராணவாயுவைக் கொண்டுவருவதற்காக, இந்தியாவுக்கு சென்றுள்ள கடற்படைக்கு சொந்தமான கப்பலில், ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்களை ஏற்றும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சென்னை துறைமுகத்தில் இந்தப் பணிகள் இடம்பெறுகிறது.
இதற்கமைய, பாரியளவான இரண்டு கொள்கலன்களின் மூலம் இலங்கைக்கு பிராணவாயு கொண்டுவரப்படவுள்ளது.
பெரும்பாலும் இன்றைய தினம் குறித்த கப்பல் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.