இறந்தவர்கள் குடும்பத்திற்கு என்ன சொல்ல விரும்புறீங்க ?

22.05.2022 16:19:00

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்ன சொல்ல போகிறீர்கள் என்ற கேள்விக்கு பேரறிவாளன் பதில் அளித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் சமீபத்தில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இத்தனை ஆண்டுகளாக ஊடகம் முன் தோன்ற முடியாமல் இருந்த பேரறிவாளன் தற்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று ஆங்கிலம் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் பேரறிவாளனிடம் அந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? அவர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து உள்ளனரே? அவர்களும் உறவுகளை இழந்து உள்ளார்கள்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா என கேட்டார்.

அதற்கு, நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நானும் அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தால் நானும் பாதிக்கப்பட்டவன் (victim) என்பதை சொல்கிறேன்.

நான் என் 31 வருடத்தை இழந்து இருக்கிறேன் என்று ஆங்கிலத்திலேயே. அடுத்து என்ன செய்வதாக இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு.. நான் இப்போதுதான் வெளியே வந்துள்ளேன். கொஞ்சம் சுவாசித்துக்கொள்கிறேன். மற்ற விஷயங்களை பற்றி பின்பு யோசிப்பேன். திருமணம் பற்றி யோசிக்கலாம் போக போக, என்று கூறினார்.