பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்புக்கு இஸ்ரேல் தடை!
ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் (UNRWA) இஸ்ரேலியப் பகுதியிலும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் செயல்படுவதைத் தடை செய்வதற்கான சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு இஸ்ரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
வாக்கெடுப்பு திங்கட்கிழமை (28) 92-10 என்ற கணக்கில் நிறைவேற்றப்பட்டது.
மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து, உதவிப் பொருட்களை அனுமதிக்க இஸ்ரேல் அதிக அழுத்தத்தில் இருக்கும் தருணத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த சட்டம் ஏற்கனவே பலவீனமான உதவி விநியோக செயல்முறையை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக் கரை – மற்றும் காஸா போன்ற பகுதிகளில் உள்ள UNRWA இன் வளாகத்தை மூடுவதற்கு இந்தச் சட்டம் வழிவகுக்கும்.
இந்த சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலைத் தீர்ப்பதற்கும், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் இந்தச் சட்டங்களைச் செயல்படுத்துவது தீங்கு விளைவிக்கும் என்றார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் இந்த நடவடிக்கை குறித்து தீவிர கவலை தெரிவித்துள்ளன.
UNRWA என்பது காஸாவில் மனிதாபிமான உதவிகளை நடத்தும் ஐ.நா.வின் முன்னணி நிறுவனமாகும்.
இது ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரேலின் போரினால் பேரழிவிற்குள்ளானது.
இஸ்ரேலிய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான UNRWA தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.