தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த சதித்திட்டம்?
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்த ஈரான் உள்ளிட்ட சில வெளிநாடுகள் முயற்சிப்பதாக குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தேர்தல் பிரசாரம் தொடர்பான தனது மின்னஞ்சல் தொடர்புகளை இரகசியமாக ஊடுருவித் திருட ஈரானில் இருந்து இணையவழியில் முயற்சிகள் நடத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்த ஈரான் உள்ளிட்ட சில வெளிநாடுகள் முயற்சிப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சார்பில் அவரது பிரசார குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பிரச்சனை ஏற்பட்டு சர்வதேச அளவில் பல இணையவழி சேவைகள் முடங்கியபோது, தேர்தல் பிரசாரம் தொடர்பான தனது மின்னஞ்சல் விவரங்களைத் திருட முயற்சி நடந்துள்ளது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.
இது தவிர ஈரான் இராணுவத்தின் உளவுப் பிரிவு கடந்த ஜூன் மாதம் தனது பிரசார குழுவிலுள்ள உயரதிகாரிகளுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளதுடன், அந்த மின்னஞ்சலைத் திறந்தால், அந்த கணினியில் உள்ள தகவல்களைத் திருடும் நோக்கில் வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.