பெங்களூருவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்
கனமழைக்கு மத்தியில் பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைய தகவல்களின்படி, எட்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர்.
மேலும், ஏழு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கரின் ஹென்னூர் பகுதியில் நேற்று (22) மாலை இந்த சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கட்டிடம் இடிந்து விழும் போது, அதில் மொத்தம் 20 தொழிலாளர்கள் இருந்துள்ளதாகவும், அடித்தளம் பலவீனமாக இருந்தமையினால் இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கலாம் என்றும் ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூருவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது, நகரின் பல பகுதிகள், குறிப்பாக வடக்கு பெங்களூரு இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.