பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

05.09.2021 11:37:46

பாராலிம்பிக்கில் ஆடவர் பிரிவு பாட்மின்டனில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்கில் ஆண்கள் பாட்மின்டனில் எஸ்எச் 6 பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகரும், ஷாங்காயின் சூ மான்கை யை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில், கிருஷ்ணா நாகர், 21- 17, 16- 21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 5 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம் என 19 பதக்கங்கள் கிடைத்து உள்ளன.