பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.5 கோடி ஒன்றிய அரசிடம் ஒப்படைப்பு

28.11.2021 07:48:59

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.5 கோடி ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை மற்றும் மதுரையில் சிக்கிய பணத்திற்கு யாரும் உரிமை கோராததால் அதனை ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடா செய்வதற்காக ரூ.2.5 கோடி எடுத்துச் செல்லப்பட்டதாக வருமான வரித்துறை ஏற்கனவே தகவல் தெரிவித்த நிலையில் பினாமி சொத்துக் குவிப்பு தடுப்பு சட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசுடைமையானது இதுவே முதல்முறையாகும்.