வடக்கின் காணி அதிகாரத்தை மத்திய அரசுக்கு விற்கும் பங்குதந்தைகளுக்கு எதிராக போராட்டம்

06.10.2021 14:33:44

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நேற்றையதினம், ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை விவசாயிகளால் நேற்றையதினம் மாலை கொட்டும் மழைக்கும் மத்தியில் சுமார் ஒரு மணிநேரம் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

ஏழைகளாகிய எங்களின் காணியும் உங்களுக்கு வேண்டுமா? எனவும் மாகாணத்தின் அதிகாரத்தை மத்திய அரசிற்கு விற்காதே, மத்திய அரசே 13-வது அரசியலமைப்பில் இருக்கின்ற வடக்கு மாகாணத்தின் அதிகாரத்தை பறிக்காதே, போன்ற பல கோஷங்களையும் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் எழுப்பியிருந்தனர்.