தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமுலுக்கு வந்தது !

19.07.2021 09:06:47

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இதன்படி மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசுப் பேருந்து போக்குவரத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜுலை மாதம் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.