ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை !
16.08.2021 11:37:49
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் இந்தியர்களை அழைத்து வருவதற்காக புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அவசரக்கால பயன்பாட்டிற்காக இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் தயார் நிலையில், உள்ளதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் 129 இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.