ஈரானில் பாரிய குண்டு வெடிப்பு!

04.01.2024 07:36:08

ஈரானில்  நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 73 பேர் கொல்லப்பட்டதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


குறித்த சம்பவமானது ஈரானியப் புரட்சிப் படைத் தளபதியான காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட  நினைவு நாள் இடம்பெற்ற  சமயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த குண்டு வெடிப்பில் சிக்கி மேலும் 171 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.