இந்திய கிரிப்டோ கரன்சியை ரிசர்வ் வங்கி உருவாக்கும்

24.11.2021 09:56:06

அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்யும் வகையிலான சட்டமூலத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இது குறித்த ஒழுங்குமுறை சட்டமூலங்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் இந்தியாவில் தடை செய்ய வழிவகை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை இந்திய கிரிப்டோ கரன்சியை ரிசர்வ் வங்கி உருவாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் அதிகாரப்பூர்வ டிஜிக்டல் நாணயத்திற்கான கட்டமைப்பை ரிசர்வ் வங்கி உருவாக்கும் வகையில் சட்டமூலம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.