இன்னும் 80 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்

11.08.2021 15:01:24

காலநிலை மாற்றத்தால் இன்னும் 80 ஆண்டுக்குள் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட நாட்டின் 12 கடலோர நகரங்கள் கடலுக்குள் மூழ்க உள்ளதாக ஐநா மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிர் தப்பிப்பது கடினம் என்று சூழிலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் அவ்வப்போது எச்சரித்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஐபிசிசி அறிக்கையில், ‘மனித நடவடிக்கையின் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் புவியின் வெப்பநிலை 1. 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

புவி வெப்பமடைதலின் காரணமாக பனிப்பாறைகள் உடைவது, கடல்நீர் மட்டம் உயர்தல், வெப்ப அலைகள் தாக்கம் அதிகரிப்பு, பஞ்சம் மற்றும் வறட்சி ஏற்படுதல் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளது.