ஜெயம் ரவியை இயக்கும் ஹரி

02.06.2022 05:47:59

அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் யானை படத்தை இயக்கியுள்ளார் ஹரி. ஆக்சன், செண்டிமெண்ட் கதையில் உருவாகியுள்ள இப்படம் ஜூன் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தையடுத்து ஜெயம் ரவியை வைத்து தனது அடுத்த படத்தை ஹரி இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பொன்னியின் செல்வன், அகிலன் படங்களில் நடித்து முடித்திருக்கும் ஜெயம் ரவி, தொடர்ந்து அகமது இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். அப்படத்தில் தனி ஒருவனுக்கு பிறகு மீண்டும் நயன்தாரா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை அடுத்து ஹரி இயக்கும் படத்தில் ஜெயம்ரவி நடிக்கப்போகிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.