அரசியல் பிரமுகர்கள் மீது பாலியல் புகார்: உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சி

26.11.2022 10:29:28

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இடது கண்ணிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டது. முடியும் அதிகமாக கொட்டியது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றேன்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர், அப்போதைய முதல் மந்திரி உம்மன்சாண்டி உள்பட பலர் மீதும் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன்பின்பு ஜாமீனில் விடுதலையான சரிதா நாயர் அவ்வப்போது கேரள அரசியல் பிரமுகர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் கூறிவந்தார். இந்த நிலையில் சரிதா நாயர் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். 

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இடது கண்ணிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டது. முடியும் அதிகமாக கொட்டியது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றேன். என்னை பரிசோதித்த டாக்டர்கள் எனது ரத்தத்தில் அதிக அளவு ஆர்சனிக், பாதரசம் மற்றும் ஈயம் போன்ற ரசாயனங்கள் கலந்திருப்பதாக கூறினர். இந்த ரசாயனங்கள் விஷத்தன்மை கொண்டவை.