தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு அவசர கலந்துரையாடல்

13.04.2022 08:56:29

நாட்டின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பாக ஆராய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் நேற்று கூடி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது.

தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமாகிய தாயகத்தில் காலை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடிய அரசியல் குழு சந்திப்பு மாலை 4 மணிக்கு முடிவடைந்திருந்தது.

குறித்த சந்திப்பில் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சி. சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், துரைராசசிங்கம் உட்பட அரசியல் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தற்போதைய அரசியல் நிலமைகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள், பொது மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.