ஈபிடிபியின் ஆதரவை நாடிய தமிழரசு கட்சி

08.03.2023 15:48:09

யாழ். மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கடந்த வாரம் சமர்ப்பித்து தோல்வியடைந்த வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு பல கட்சிகளின் காலைப்பிடித்தும் சரிவராமையால், இறுதியில் ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தாவிடம் நாடிய தமிழரசின் முந்திரிக்கொட்டை உங்கள் கட்சி உறுப்பினர்களை ஆதரவு அளிக்குமாறு கெஞ்சியுள்ளார்.

அதற்கு டக்ளஸ் தேவானந்தா கூறியபதில் தான் ஆச்சரியமாக இருந்துள்ளது.

எழுத்து மூலமான ஆதரவு

ஈபிடிபியின் ஆதரவுக்கு கெஞ்சிய தமிழரசின் முந்திரிக்கொட்டை | Illankai Tamil Arasu Kachchi Support From Epdp

 

அவர் அந்த முந்திரிக்கொட்டையிடம் எழுத்து மூலமாக நீங்கள் ஒரு கடிதமும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஒரு கடிதமும் எனக்கு எழுத்துமூலமாக தனித்தனியாக தந்தால் எனது கட்சி உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவு வழங்குவார்கள் எனக் கூறியுள்ளாராம்.

ஏன் எழுத்தில் தரக்கேட்கிறீர்கள் என முந்திரிக்கொட்டை டக்ளசிடம் கேட்டபோது, ஏற்கனவே 2018, இல் இப்படித் தான் நீங்களும், மாவையரும் ஆதரவு கேட்டீர்கள். இதை நான் கூறியபோது அப்படி கேட்கவில்லை என மறுத்தீர்கள் .

அதுதான் எழுத்து மூலமாக ஆதரவு கேட்டால் நான் அதை பகிரங்கமாக மக்களுக்கு கூறலாம் என்றார்.

தமிழரசுக் கட்சியை திட்டித்தீர்ப்பவருக்குத்தான் மேயர் பதவி!!

 

இதனைக் கேட்ட முந்திரிக்கொட்டை “நான் இப்பதான் முல்லைத்தீவில் தமிழரசுக் கட்சி வேட்பு மனு நிராகரித்தமையால் ஹக்கீமின் காலைப் பிடித்து அதற்கு ஒருமாதிரி தராசு சின்ன வேட்பு மனுவைக்கொண்டு சரிபண்ண பார்த்தேன்.

இதனையும் கட்சியில் உள்ள கிழக்கு மாகாண உறுப்பினர்கள் எதிர்கின்றனர். எனக்கேன் வீண்வம்பு என பின்வாங்கி விட்டாராம்".