சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

25.03.2026 08:25:26

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்திக்கு நேற்று இரவு ஏற்பட்ட திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியா காந்திக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சோனியா காந்தியின் மகனான ராகுல் காந்தியும், மகள் பிரியங்கா வத்ரா ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து தாயை சந்தித்து நலம் விசாரித்தனர்.

தற்போது சோனியா காந்தி அவர்களின் உடல்நிலை தீவிரமாக கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செயல்பட்டு வருகிறார். சோனியா காந்தி 5 முறை மக்களவை எம்.பி யாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.