ஆக்கிரமிப்பு பகுதிகளை உக்ரைன் விட்டுத்தராது

26.05.2022 09:24:51

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 மாதங்களை கடந்துள்ளது. ரஷிய ராணுவ தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

08.53: கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன், ரஷியா போரினை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து இருநாட்டு தூதரகங்களும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அமைதி உடன்படிக்கைக்காக ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து உக்ரைன் வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் தொடரும் என கூறினார்.

 

06.00:உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட, உக்ரைனுக்கான அமைதித் திட்டம் ஒன்றை இத்தாலி முன்மொழிந்துள்ளது. ஆனால் இந்த திட்டம் வெறும் கற்பனையாகவே போய்விடும் என ரஷியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா விமர்சித்துள்ளார். 

 

02.00: டாவோசில் நடைபெற்று வரும் உலக வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ சொரோஸ் பங்கேற்று பேசினார். 

 

அப்போது பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு மூன்றாவது உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லலாம். அத்தகைய போர் மனித குலத்தை முழுமையாக அழித்துவிடும். எனவே, மனிதகுலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இப்போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். விளாடிமிர் புதின் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்.