மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அவரச கோரிக்கை!

14.07.2022 07:23:27

கோட்டாபய ராஜபக்ஷ  ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்த நிலையில் மாலைத்தீவு தப்பிச்சென்றது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு தற்போது கலவரபூமியாக மாறியுள்ளது.

 மேலும், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் நோக்கி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றமையினால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மூலம் நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் எனவும் அதைச் சுற்றி ஒரு இராணுவ ஆட்சிக்கு தலைகுனிவு.

தலைவர் என்று அழைக்கப்படுபவர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும், நாடாளுமன்றம் மற்றும் சபாநாயகர் மாளிகையை முற்றுகையிடுவதை தவிர்க்குமாறும் போராட்ட இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முகநூலில் தெரிவித்துள்ளார்.