இடைத்தேர்தலில் சின்ன துரும்பை கூட விடாத விஜய்!
|
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அரசியல் அனலைக் கிளப்பியுள்ளது. கிராமங்கள் தோறும் நீண்ட மேடைப் பேச்சுகள், ஐந்து மணி நேரத்துக்கும் மேலான நீண்ட வாகனப் பேரணிகள் (ரோட்ஷோ), சாலையோர டீக்கடைகளில் திடீர் சந்திப்புகள் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முழு வீச்சில் களமிறங்கிப் பணியாற்றி உள்ளார் . கடந்த சட்டசபை தேர்தலின் போது தீவிரமாகப் பிரச்சாரம் செய்யவில்லை என்று எழுந்த விமர்சனங்களுக்கு முற்றிலும் மாறாக, இந்த இடைத்தேர்தலில் விஜய் காட்டும் இந்த அசாத்திய சுறுசுறுப்புக்குப் பின்னால் ஒரு ஆழமான அரசியல் கணக்கு இருப்பதாக ஊடகப் பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன. |
|
தாராபுரம் தவெகவுக்கு ஏன் இந்த இடைத்தேர்தல் வாழ்வா-சாவா போராட்டம்? ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் முதல்வர் விஜய்க்கும் இந்தத் தேர்தல் வெற்றி என்பது வெறும் இரண்டு சட்டமன்ற இடங்கள் சார்ந்தது மட்டுமல்ல. தாராபுரத்தைப் பொறுத்தவரை உள்ளூர் சமூகச் சூழலும், அதிமுகவின் பலமும் போட்டியை மிகக் கடுமையாக்கியுள்ளன. இருப்பினும், சாதாரண வெற்றியாக இல்லாமல் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கடுமையான நெருக்கடியில் தவெக தலைமை உள்ளது. விஜய் மீதான மக்களின் ஆதரவும் செல்வாக்கும் சிறிதும் குறையவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. 2026 பொதுத்தேர்தலில் 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 120 என்ற பலத்தை எட்டி ஆட்சியமைத்தது. ஆனால், கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்திராமல், சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மைக்கான 118 இடங்களை தவெக தனது சொந்த பலத்திலேயே எட்ட வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். அதோடு உளவுத்துறை சார்பாக தாராபுரத்தில் நிலவரம் சரியில்லை சார் என்று தரப்பட்ட வார்னிங்கும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வருகையும் இடைத்தேர்தல் களமும் கடந்த மே 13 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே அதிமுகவின் 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், பின்னர் அதில் 5 பேர் மீண்டும் அதிமுகவிற்கே திரும்பினர்; 6 பேர் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தனர். அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசலைப் பயன்படுத்தி, அங்கிருந்து விலகி வந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் பி. சத்யபாமா (தாராபுரம்) ஆகியோரை இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களாக விஜய் களமிறக்கியுள்ளார். Recommended for you “பாண்டியம்மா சிஸ்டர்”.. விஜய் டிராக்டர் ஓட்டிய வீடியோவை வைத்து பங்கம் செய்த அதிமுக ஐடி விங்! இவ்விரு தொகுதிகளிலும் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தால் மட்டுமே, எடப்பாடி பழனிசாமியின் தலைமையை எதிர்த்து மேலும் பல அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தைரியமாக வெளியேறி தவெக பக்கம் வருவார்கள் என விஜய் கணக்கு போடுகிறார். இதன் மூலம், திருச்சிராப்பள்ளி கிழக்கு (விஜய் ராஜினாமா செய்த தொகுதி) உள்ளிட்ட காலியாக உள்ள பிற ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தலை தவெக அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். மாறாக, ஒன்றில் தோல்வியடைந்தாலோ அல்லது வாக்கு வித்தியாசம் குறைந்தாலோ, கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் ஆட்சியைப் பிடித்த விஜய்யின் அரசியல் பிம்பத்திற்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். திராவிடக் கட்சிகளை ஓரங்கட்டும் நீண்டகால வியூகம் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் இதுகுறித்துப் பேசுகையில்: "திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான திராவிடக் கட்சிகளையும் நீண்ட காலத்திற்கு அரசியல் களத்திலிருந்து பின்னுக்குத் தள்ள வேண்டும் என்ற கணக்கிடப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகவே விஜய்யின் இந்த அதிரடிப் பிரச்சாரம் அமைந்துள்ளது. 2026 தேர்தலில் திராவிடக் கட்சிகள் சந்தித்த சரிவைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்த விஜய், தேர்தல் காலத்தில் தான் பேசிய கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அதிமுகவில் இருந்து ஆட்களை இழுத்து வருகிறார். இதன் மூலம் அரசியல் அறநெறி என்பது மற்றவர்களுக்கு மட்டுமே தனக்கு அல்ல என்பதை முதலமைச்சர் வெளிப்படுத்துகிறார். தாராபுரத்தில் மாட்டு வண்டிப் பிரச்சாரம்: எளிய மனிதர் பிம்பம் இத்தகைய கடுமையான அரசியல் கணக்குகளுக்கு நடுவேதான், தாராபுரத்தின் கிராமப்புறங்களில் மாட்டு வண்டியை ஓட்டியவாறும், மதுராந்தகத்தில் வயலில் இறங்கி டிராக்டரை இயக்கியவாறும் விஜய் அடிமட்ட வாக்காளர்களை நேரில் கவர்ந்து வருகிறார். தனிப்பெரும்பான்மையை அடைவதற்கான சாணக்கிய நகர்வுகளும், அடிமட்ட எளிய மக்களுக்கான நேரடி அணுகுமுறையும் கைகோர்த்துள்ள இந்த இடைத்தேர்தலில், முதலமைச்சர் விஜய்யின் வியூகம் முழு வெற்றி பெறுமா என்பதை வாக்கு எண்ணிக்கை நாளான அக்டோபர் 9 அன்று வெளியாகும் முடிவுகளே தீர்மானிக்கும். |