தெறிக்கவிடும் துல்கர் சல்மானின் காந்தா.
18.11.2025 14:55:35
|
துல்கர் சல்மான், பாக்கியஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி மற்றும் ராணா டக்குபதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் காந்தா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. |
|
படம் வெளியான முதல் நாளில் மட்டுமே ரூ. 10 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது. கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான இப்படம் மொத்தமாக இதுவரை ரூ. 27 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. லோஹா படத்தை தயாரித்து வெற்றிக்கண்ட துல்கர் சல்மான் நடிப்பில் காந்தா வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. |