காலவரையின்றி மூடப்படும் கல்லூரி.
28.08.2024 09:20:37
கும்பகோணம் அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி கல்லூரி மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரியில் எம்.ஏ தமிழ் 2ம் ஆண்டு படிக்கும் மாணவரை ஆசிரியர் ஒருவர் ஜாதி ரீதியாக பேசியதாகக் கூறி, கடந்த 6 நாட்களாக வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் முடிவுக்கு வராததால் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி கல்லூரி மூடப்படுகிறது என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் படித்து வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.