மைத்திரியின் வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

26.03.2024 08:14:20

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய, வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் நேற்று சுமார் 6 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், அவரது வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான உண்மைகள் தமக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி கண்டியில் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, குறித்த கருத்து தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்ததை அடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி, வாக்குமூலம் வழங்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.