பார்சிலோனா கழக அணிக்காக மேலும் 5 ஆண்டுகளுக்கு விளையாட மெஸ்ஸி ஒப்பந்தம் !

16.07.2021 10:55:38

தலைமுறையின் சிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா கழக அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் 34 வயதான மெஸ்ஸியின் 21 ஆண்டுகால ஒப்பந்தம் சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மெஸ்சி எந்த அணிக்கும் சொந்தமில்லை என்றும் தனி வீரர் என்றும் அறிவிக்கப்பட்டது.

அவர், நினைத்தால் எந்த கழக அணிக்காகவும் வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது மெஸ்ஸியின் ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு பார்சிலோனா கழக அணியுடன் நீடிக்கப்படுகின்றது.

மெஸ்ஸியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதை பார்சிலோனா கழக அணி ஒப்புக்கொண்டுள்ள அதேவேளை, கழகம் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், மெஸ்ஸிக்கு வழங்கப்படும் ஊதியம் 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

இதை மெஸ்ஸி தரப்பு ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. ஒப்பந்த நீடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.