புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

19.01.2022 03:11:45

சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இந்தமுறை 2,943 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்காக 340,508 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

பரீட்சை இணைப்பு நடவடிக்கைகளுக்காக 496 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்த பரீட்சையின் போது, சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்ற சகல மாணவர்களும், ஆசிரியர்களும், மண்டப பொறுப்பாளர்களும், செயற்குழுவினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எல்.டீ தர்மசேன வலியுறுத்தியுள்ளார்.