திமுக கூட்டணியில் ராமதாஸ் பாமக?
26.02.2026 13:57:31
2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஒருபுறம் காங்கிரஸ் வெளியேறினால், அந்த இடத்தை பூர்த்தி செய்ய பாமக , திமுக கூட்டணியில் இணையக்கூடும் என்ற பலத்த யூகம் எழுந்துள்ளது. ராமதாஸின் இந்த நகர்வு வடதமிழகத்தில் திமுகவை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், அதிமுகவில் ஓரங்கட்டப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் , சசிகலாவுடன் இணைந்து புதிய பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக , தவெக-காங்கிரஸ் கூட்டணி மற்றும் ஓபிஎஸ்-சசிகலா அணி, சீமானின் நாம் தமிழர் கட்சி என என 5 முனைப் போட்டி உருவாகும் சூழல் நிலவுகிறது.
இந்த மல்டி-கார்னர் போட்டி வாக்குகளை சிதறடித்து, தேர்தல் முடிவுகளை யாராலும் கணிக்க முடியாத நிலைக்குக் கொண்டு செல்லும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.