அகதிகள் தப்பி செல்ல உதவியதாக மேலும் ஒருவர் கைது

05.12.2021 10:56:28

குமரி கடல் வழியாக அகதிகள் தப்பி செல்ல உதவியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் இலங்கையை சேர்ந்தவர்.

குமரி மாவட்டம் குளச்சல் கடல் வழியாக கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை அகதிகள் 60 பேர் படகு மூலமாக இலங்கைக்கு தப்பி சென்றதாக பரபரப்பு தகவல் வெளியானது.

இந்த சம்பவம் பற்றி கியூ பிரிவு  காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடல் வழியாக தப்பிச் சென்றது வெளி மாவட்டங்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் என்பதும், தப்பி செல்ல முயன்ற போது வேறொரு நாட்டின் கடற்படையினரிடம் அவர்கள் சிக்கியதும் தெரியவந்தது.