ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்கும் ரணில்..!

05.08.2022 10:32:25

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க குறித்த சந்திப்புக்கான அழைப்பை விடுத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன..

இதேவேளை, அதிபர் செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், எனினும் இந்த சந்திப்புக்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட முன்னணி ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.